Sunday, July 27, 2014

SARAH NAVAROJI


இவர் தனது பெற்றோருக்கு கடைசி பிள்ளை. இவரது தந்தை திரு.சாலமோன் ஆசிர்வாதம் ஒரு Violin வித்வானகவும்,கர்நாடக இசை ஆசிரியராகவும் இருந்தார்.தனது தந்தையிடம் இவர் முறையாக இசை பயின்றார்.

"நவரோஜி" என்பது கர்நாடக இசையில் ஒரு ராகம்.அதை இவரது தந்தை இவருக்கு பெயராக சூட்டினர்.

இவரது 21-வது வயதில் Mission பணிக்காக இலங்கை செல்ல வேண்டியதாக இருந்தபோது,அதற்காக தனுஷ்கோடி செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்திருந்தபோது,தன்னை வழியனுப்ப தனது தயார் வருவார் எனக் காத்திருந்தார்.நேரம் கடந்து போனதே தவிர,தயார் வரவில்லை இந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல் தான் "என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்" ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும்,மறவாமல் நேசிக்கும் தேவனை மையபடுத்தி எழுதப்பட்ட பாடல் இது.இந்த பாடல் எழுதபட்ட வருடம் 1960

இவர் சென்னை Electriccity board - இல் பணியாற்றி கொண்டிருந்த போது ஒரு தெய்வீக தரிசனத்தைக் கண்டு,தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியப் பணியை தொடங்கினர்.

இவர் உயர் நிலை பள்ளியில் படித்துகொண்டிருக்கும் போது UN அமைப்பு நடத்திய ஒரு பாட்டு போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார்.

இவரது பாடல்களில் இசை,இலக்கணம் (பல்லவி,அனுபல்லவி மற்றும் சரணங்கள்) முறையாக கடைபிடிக்கப்பட்டது.

இசைத்தகடு தயாரிப்பில் புகழ் பெற்ற நிறுவனமான HMV,இவரது பாடல்களை தயாரித்து வெளியிட்டு வந்தது.

All India Radio இவருடைய பாடல்களை தொடர்ந்து பல ஆண்டுகள் ஒலிபரப்பிவந்தது வந்தது.

இவருக்கு Rhode island -இல் உள்ள ஒரு சர்வதேச பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

இவர் கடந்த 50 ஆண்டுகளில் 365 பாடல்களை எழுதி,இரக்கம் அமைத்து,பாடி வெளியிட்டிருக்கிறார்.

தற்போது 74 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவரது வாழ்க்கை,மற்றும் பாடல்களை குறித்த ஒரு புத்தகம் "முட்களுக்குள் லீலி புஷ்பம்"(Lilly among the Thtons)என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இயேசுவுக்கென்று தன் வாழ்கையை அர்ப்பணித்து கடைசி வரை அதில் நிலைத்துநின்று இன்று (22.07.2014) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் தான் உண்மையாய் சேவித்த அன்பர் இயேசுவின் பாதத்தில் சேர்க்கப்பட்ட சகோதரி. சாராள் நவரோஜி அவர்களுடைய வாழ்க்கைக்காக கர்த்தரை துதிக்கிறேன்.

சகோதரி அவர்கள் வாழ்ந்த உடலை நாளை (23.07.2014) மாலை சுமார் 3 மணியளவில் கீழ்பாக்கம் கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.

இவருடைய முகவரி மற்றும் தொடர்பு எண் :

SISTER: SARAH NAVAROJI,
46, Kuttiappan 2nd Street, Kilpauk,
Chennai – 600 010, INDIA.
Tel : +91- 44 – 26422692
E-Mail : prayerhouse@sarahnavaroji.com
 

Composer-singer Sister Sarah Navaroji is a pioneer in Tamil Christian devotional music.

She was barely 21 when she was chosen for mission work in Ceylon as it was then known. She was to set sail from Dhanushkodi. To reach the coastal town, Sarah had to take a train from Egmore. After boarding the train, she eagerly waited for her mother to arrive (her father had passed on when she was 10) to see her off. But minutes ticked by and there was no sign of her.
The poignant occasion inspired her to compose the beautiful Tamil song while inside the train: ‘Ennai Maravaa Yesu Naathaa,' which spotlights the Lord's unfailing love even though a mother might forget her child. The year was 1960 and composer-singer Sarah Navaroji was getting into her stride.
A pioneer in Tamil Christian devotional music, she is the next big name after the composers of the late 19th century who wrote Carnatic raga-based Christhava Keerthanais. A prolific composer, Sister Sarah Navaroji as she is known, has written, set to tune, sung and recorded 356 songs over the past five decades. Several of her songs are hits and are sung by other artists as well as played in Tamil Christian churches and homes all over the globe. Her VCDs and CDs continue to sell well.
All-time favourites such as ‘Thothiram Paadiyae', ‘Thirupatham Nambi Vandaen' and ‘Unnathamanavarin' are often heard on various occasions but many may not know that these are Sarah's works - they are among her many evergreen hits.
At 73, she earnestly continues her work for God, having chosen to remain single. She commands admiration for her music, sermons and simplicity - clad in all-white, which gives her a definite aura.
In lilting Tamil akin to poetry, the substance of which is comforting and makes one focus on God, her compositions are marked by all the finer nuances of music grammar with pallavi, anupallavi and saranams in place. Hence music directors such as Sathi Victor, Kalyanam,Mangalamoorthi, Henry Daniel, Richard Vijay and Andrew Augustine found it a pleasure to score music for her many albums.
HMV, AIR artist
Sarah was an HMV artist which meant the record company took full charge of production and distribution. For years, the AIR regularly featured her Bhakti Padalgal. She was conferred a doctorate by an international institute in Rhode Island. Many of her compositions have been translated into Hindi, Telugu and Malayalam and she has travelled to the U.S., U.K., and European countries to sing and to take ‘God's Word' to eager audiences.
Solomon Asirvatham, her father, a violinist and Carnatic music teacher named his three daughters after Carnatic ragas: Lalitha, Vasantha and Navaroji and taught them music. Sarah, the youngest in the family, won the first prize in the U.N. song contest when she was a student of Bentinck Girls' High School.
After a divine vision, Sarah resigned her job with the Madras Electricity Board and began to do full time ministry. Professor R. Michael Faraday, Madras Christian College, refers to her songs as “sweet melodies that melt hearts (idhayathai urukkum iniya keethangal)” and includes her in the illustrious list of Indian women who served Christ: Pandit Rama Bhai, Amy Carmichael, Sesharatnam and Sannyasini Ponnammal.
The melody queen Hema John says that Sarah's lyrics have touched the lives of thousands of people and taken them closer to God. “There's divine anointing in her singing”, is how John puts it.
The book, ‘Lily among Thorns' in Tamil has been released. It details the life and music of Sarah Navaroji and is written by Dr R. Samuel, a former merchant navy officer and engineer, who now serves in the Zion Full Gospel Prayer Fellowship Church. For details, contact 9884713075.
 

Saturday, March 15, 2014

skit

விசுவாச வீரன்
காட்சி 1

ஜார்ஜ் முல்லர் சிறுவர் ஆஸ்ரமம்
நண்பர்:  ஜார்ஜ் சொல்ரன்னு தப்பா எடுத்துகாத
கடவுல நம்பி ஊழியம் செய்ற. உன்னுடைய தேவையே பெரிசா    
       இருக்கும் போது நீ எதுக்கு ஜார்ஜ் இந்த மாதிரி ஒரு ஆஸ்ரமம்
       நுடத்தி கஷ்டப்படுற.
ஜார்ஜ்: இதோ பாரு நம்மால முடியுற காரியத்த செஞ்சோம்னா   
      அதனால ஆண்டவர் நாமம் மகிமைப்படுமா? எப்போ மனுஷனால முடியவே முடியாதுன்னு நினைக்கிற சூழ்நிலை  வரும்போதுதான் நம்ம ஆண்டவர் மேல விசுவாசம்  
      வைக்கிறோம். நம்ம விசுவாசத்தினால தான் நமக்கு அற்புதம் செய்வார்.
நண்பர்: நீ சொல்லுறது வாஸ்தவம்தான்
ஆனா நீ அளவுக்கு மீறி ஆண்டவர சோதிக்கிற மாதிரி தெரிது.
 ஜார்ஜ்: நிச்சயமா இல்ல இந்த மாதிரி சொதனையின் மூலமா தான்
       நமக்கு வெற்றி கிடைக்கும்.
              சோல்ல போனா நம்ம அவர் மேல வச்சிருக்க நம்பிக்கை அளவுக்கு அதிகமா பெருகுச்சுன்னா அது ஆண்டவரை துக்கப்படுத்துரது இல்ல சந்தேஷ படுத்துரது தான்.



காட்சி 2
 உதவியாளர் : ஐயா நம்ப கிட்ட அருக்க ஸ்டோர் கையிருப்பு மதிய வுணவோட சுத்தமா காலி ஆகிடுச்சு.
             இப்ப இரவு பிள்ளைகளுக்கு உணவிற்கு என்ன பண்றது ஐயா!
ஜார்ஜ் :  (கொஞ்சம் கூட அசராமல்)
வழக்கமா என்ன செய்வீங்களோ அதயே செய்யுங்க.
உதவியாளர் : ஐயா என்ன சொல்றீங்க?.....
புநழசபந: சாப்பாடு நேரம் ஆன உடனே மணி அடிங்க. பசங்கள பிரேயர் பன்ன சொல்லுங்க.
உதவியாளர் : ஐயா ஆனா சாப்பாடு இல்லயே
புநழசபந:  சாப்பாடு வரவேன்டிய நேரத்துக்கு வரும் ஆண்டவர் பட்டினிபோடமாட்டார்.
உதவியாளர் :  ஐயா நம்ப பன்றது சரியாபடல கண்ணுக்கு எட்டுற தூரம் வiர்ககும் சாப்பாடுக்கு வழியே இல்ல.
 புநழசபந: நம்ம விசுவாசம் பேச்சுல இல்ல செய்கையில தான் இருக்கனும்.
       இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில்தான் ஆண்டவரால எல்லாமே முடியும்னு நாம விசுவாச அரிக்கை செய்யனும்
        போய் பெல்அடிச்சு பசங்கள வுட்கார வையுங்கள்.




ளநநn  3:(இப்ப பெல் அடிக்கிறதுஇ பிள்ளைகள் சாப்பாட்டிற்காக வரிசையாக வருகிறார்கள்-முழங்கால்படியிட்டு ஜெபிக்கிறார்கள்(ஜெப பாட்டு))
பாட்டு- அன்றாட உணவை ஒவ்வொரு நாளும் எனக்கு தாரும் ஐயா.
அதே சமயம்:
உதவியாளர்: ஐயா! நீங்க சொன்ன மாதிரி செஞ்ஞிட்டேன். எனக்கு இது சரியா படல.
 புநழசபந: பாருப்பா ஆண்டவர் இந்த முறை என்னை கைவிட்டாருனா இதுதான் முதல்முறை அவர் என்னை கைவிடுரதாயிருக்கும்.
           ஆண்டவர் இதுவரை கைவட்டதில்லை இனியும் கைவிடமாட்டார்.

புநழசபந அரடடநச- இந்த அறிக்கையை சொன்ன உடனே
…..ஒரு வாகனம் வருகிறது…..  அந்த வாகனத்திலிருந்து ஒருவர் வந்து….
     ஐயா! வணக்கம் அரன்மனைல விருந்துல உணவு மிகுதியாகிடுச்சு.
மீதியான உணவை ராஜா பக்கத்துல இருக்க ஆஸ்ரமத்துக்கு குடுக்க சொல்லியிருந்தார்……. அதுபக்கத்துல உங்க ஆஸ்ரமம் தான் இருந்தது.
       ஊங்க பிள்ளைகளுக்கு இதை அளிக்க நீங்க அனுமதிக்கனும். 
புநழசபந: தன் இரு கைகளை உயர்த்தி கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறார்.
யுளளளைவ: ஆச்சரியத்தில் வியக்கிறார்.

முடிவுரை
உணவுக்கு வழியே இல்லாத அந்த சூழ்நிலையிலும் தேவன் அவர்களுக்கு உணவளித்தார். இதுபோல என்னில்லா விசுவாச பரிட்ச்சைகள் புநழசபந அரடடநச அன்னாருக்கு வந்தது தேவனையே சார்ந்து ஜெயம் கொண்டார்.